ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 15 வயது சிறுவன்

0 3178

ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மனநிலை பாதிக்கப்பட்ட 15 வயது சிறுவன் என்பதை கண்டுபிடித்து போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட நபர், ரஜினியின் போயஸ் கார்டன் வீட்டில் வெடி குண்டு வெடிக்கப் போவதாக மிரட்டல் விடுத்துவிட்டு தொலைப்பேசி அழைப்பை துண்டித்துவிட்டார்.

இதையடுத்து அந்த நபரின் செல்போன் எண் டவரை ஆய்வு செய்ததில், கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் இருப்பது போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நெல்லிக்குப்பம் சென்று செல்போன் எண்ணை பயன்படுத்திய 15 வயது சிறுவனை நேற்றிரவு பிடித்தனர்.

அதில் மனநிலை பாதிக்கப்பட்டதும், விளையாட்டாக செய்ததும் தெரிய வந்துள்ளது. இதனால் சிறுவனின் பெற்றோரிடம் எழுதி வாங்கிக் கொண்டு போலீசார் அனுப்பினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments