இடுப்பில் நடந்த ஆபரேஷன்... தொடர்ந்து கார்டியாக் அரெஸ்ட்! 'ஐயப்பனும் கோஷியும் 'இயக்குநருக்கு நிகழ்ந்தது என்ன?

0 5669

ஐயப்பனும் கோஷியும் மலையாள பட இயக்குநர் சச்சி என்ற சச்சிதானந்தத்தின் திடீர் மறைவு மலையாள திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மலையாள திரையுலகின் இரட்டைக் கதாசிரியர்களாக திகழ்ந்தவர்கள் சேது மற்றும் சச்சி என்ற சச்சிதானந்தம். இவர்களின் முதல்படமான 'சாக்கலேட் ' என்ற மலையாள படம் ஹிட்டானது. 2011- ம் ஆண்டு சேதுவும் சச்சியும் பிரிந்து, தனித்தனியாக செயல்பட்டனர். 2011- ம் ஆண்டு சச்சி எழுதிய திரில்லர் படமான' ரன் பேபி ரன்' படம் சூப்பர் ஹிட்டாகியது. இந்த படத்தில் மோகன்லால் நடித்திருந்தார். 2015- ம் ஆண்டு 'அனார்க்கலி ' என்ற படத்தை இயக்கினார். பிரிதிவிராஜ் நடித்த இந்த படம் செம சக்ஸஸ் ஆனது. 2015 ம் ஆண்டு இவரின் இயக்கத்தில் வெளியான ஐயப்பனும் கோஷியும் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியது. சமீபத்திய மலையாள படங்களில் மிகச் சிறந்த படமாக ஐயப்பனும் கோஷியும் படம் கருதப்பட்டது. பிரிதிவிராஜ், பிஜூ மேனன் ஆகியோர் இந்த படத்தில் நடித்திருந்தனர். புது முகமான ஜெயம் நம்பியார் படத்தை அடுத்ததாக சச்சி இயக்கப் போவதாக சொல்லப்பட்டது.

இந்த நிலையில், சச்சிதானந்துக்கு இடுப்பு பகுதியில் வடக்கன்சேரியில் உள்ள  மருந்துவமனையில் அறுவை சிகிச்சை நடந்தது.இடுப்பு அறுவைசிகிச்சைக்காக மே 1- ந் தேதி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். மே 4- ந் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் , இரண்டாம் கட்ட அறுவை சிகிச்சைக்காக ஜூன் 13- ந் தேதி மீண்டும் அவர் மருந்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில்தான் அவருக்கு கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டது. தொடர்ந்து, திருச்சூரில் உள்ள ஜூபிலி மிஷன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்து போனதாக ஜூபிலி மிஷன் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

கொச்சிக்கு இன்று எடுத்து செல்லப்படும் அவரின் உடல் மாலை அடக்கம் செய்யப்படுகிறது. தற்போது, 48 வயதான சச்சி சிறந்த வழக்கறிஞர் ஆவார். மரணத்துக்குப் பிறகு, தன் கண்களை தானம் செய்ய அவர் விரும்பினார். அதன்படி, சச்சியின் கண்கள் தானம் செய்ப்பட்டன.

மலையாள பட பிரபலங்கள் சச்சியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments