உள்நாட்டு ஏவுகணையை வெற்றிக்கரமாக சோதனை செய்த ஈரான் கடற்படை

0 1707

ஈரான் கடற்படை, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கப்பல் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஈரானுக்கு எதிராக ஐ.நா. விதித்த ஆயுதத் தடையை நீட்டிக்க அமெரிக்கா முயன்று வரும் நிலையில், இந்தியப் பெருங்கடலுக்கு வடக்கே ஓமன் வளைகுடாவில் நடந்த ஈரான் கடற்படை பயிற்சியில் 280 கிலோ மீட்டர் இலக்கை தாக்கி அழிக்கவல்ல புதிய தலைமுறை கப்பல் ஏவுகணைகளை சோதனை செய்யப்பட்டதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், கடற்கரையிலிருந்தும் கப்பல் தளங்களிலிருந்தும் குறுகிய மற்றும் நீண்ட தூர ஏவுகணைகள் கடலில் சோதனை செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments