சீனப் பொருட்களை வாங்காமல் மக்கள் புறக்கணிக்க வேண்டும் -மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே

0 2496

சீன உணவகங்களை மூட வேண்டும் என்றும், சீன உணவு வகைககளை அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கேட்டுக்கொண்டுள்ளார். இந்தியக் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ராம்தாஸ் அத்வாலே சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சராக உள்ளார்.

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் இந்திய வீரர்கள் 20 பேர் சீனப் படையினரால் கொல்லப்பட்டதற்கு நாடு முழுவதும் கண்டனம் எழுந்துள்ள நிலையில், அது குறித்து ராம்தாஸ் அத்வாலே செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி அளித்தார். அதில் சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மக்கள் வாங்காமல் புறக்கணிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments