புலம் பெயர் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க ரூ.50 ஆயிரம் கோடியில் திட்டம்-நிர்மலா சீதாராமன்
புலம் பெயர் தொழிலாளர்களின் வேலைவாய்ப்புக்கான கரீப் கல்யாண் ரோஜ்கார் திட்டத்திற்கு மத்திய அரசு 50 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மொத்தம் 116 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ள 25 வகையான பணிகளுக்கு இந்த தொகை பயன்படுத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.
இந்த 116 மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பை உருவாக்க நினைப்பவர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் ஊக்கமளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பீகார், ஜார்கண்ட், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஒடிசா மற்றும் ராஜஸ்தானில் உள்ள இந்த 116 மாவட்டங்களிலும் திரும்பி வந்துள்ள புலம் பெயர் தொழிலாளர்களின் தொழில்திறன் வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த 116 மாவட்டங்களிலும் தலா 25000 புலம் பெயர் தொழிலாளர்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
Comments