ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை கொரோனா சிகிச்சைக்கு வழங்க வேண்டாம்-WHO
கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சையில் மலேரியா எதிர்ப்பு மருந்தான ஹைட்ராக்சிகுளோரோகுயினை வழங்க வேண்டாம் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
சமீப காலங்களில் இந்த மருந்து மூலம் நடத்தப்பட்ட சிகிச்சையில், கொரோனாவால் ஏற்படும் இறப்பு விகிதங்களை குறைக்க முடியாது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அது தெரிவித்துள்ளது.
கொரோனா சிகிச்சைக்காக ஏற்கனவே ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை எடுத்துக் கொள்பவர்கள், தங்களது மருத்துவர்களின் ஆலோசனையின் படி அதை நிறுத்தவோ அல்லது முழுமைபடுத்திக் கொள்ளவோ செய்யலாம் என அறிக்கை ஒன்றில் உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது.
The Solidarity Trial's hydroxychloroquine arm is being stopped, on the basis of evidence showing it does not reduce mortality for hospitalised #COVID19 patients.
— World Health Organization (WHO) (@WHO) June 17, 2020
Comments