குரலை பதிவு செய்து பதிவிடும் புதிய வசதி ட்விட்டரில் அறிமுகம்
பிரபல சமூக இணையதளமான ட்விட்டர், குரல் பதிவை தகவலாக வெளியிடும் புதிய வசதியை அறிமுகபடுத்தியுள்ளது.
பிற சமூகஇணையதளங்களை போல அல்லாமல் ட்விட்டரில் அதிக வார்த்தைகளை பகிர முடியாத நிலை உள்ளது. இந்த குறையை போக்கும் வகையில் பல்வேறு புதிய வசதிகளை ட்விட்டர் அறிமுகபடுத்தி வருகிறது.
அந்த வரிசையில், தற்போது 140 விநாடி மட்டும் குரலை பதிவு செய்து, அதை தகவலாக பகிரும் வசதியை அறிமுகபடுத்தியுள்ளது.
முதல்கட்டமாக iOS பயன்பாட்டாளர்களில் சிலருக்கு மட்டும் இந்த வசதியை அளித்துள்ள ட்விட்டர், பிறகு படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என அறிவித்துள்ளது.
பிற பதிவுகளை போலவே இதுவும் டைம்லைனில் தோன்றும், இதைகேட்டு மறுபதிவிடவும் முடியும் எனக் கூறியுள்ளது.
Comments