ஆஸ்திரேலியாவில் கொரோனா ஊரடங்கால் வேலைவாய்ப்புத்துறைக்கு பேரடி-பிரதமர் ஸ்காட் மோரிசன்
ஆஸ்திரேலியாவில் கொரோனா ஊரடங்கால், வேலைவாய்ப்புத்துறைக்கு ஏற்பட்ட பெரிய அடி பேரழிவுக்கு (devastating) வழிவகுப்பதாக பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.
ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு பிறகு பொருளாதார மந்த நிலையை சந்தித்துள்ள ஆஸ்திரேலியாவில், வேலையின்மை விகிதம் 19 ஆண்டுகளில் இல்லாத அளவு 7 புள்ளி 1 சதவீதமாக ஆக உயர்ந்துள்ளது என்றும் இது நடப்பு ஜூன் மாதத்தில் 10 சதவீதமாக உயரும் என்றும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
ஊரடங்கு காரணமாக ஏப்ரல் மாதத்தில் சுமார் 6 லட்சம் பேரும் மே மாதத்தில் மேலும் 2 லட்சத்து 27 ஆயிரம் பேரும் வேலையிழந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
Comments