10, 11-ம் வகுப்புக்கு மதிப்பெண் வழங்க விடைத்தாள்களை ஒப்படைப்பது கட்டாயம் இல்லை-தேர்வுத்துறை அதிகாரிகள்
பத்து, பதினோறாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க காலாண்டு, அரையாண்டு தேர்வு விடைத்தாள்களை ஒப்படைப்பது கட்டாயமில்லை என தேர்வுத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வும், 11-ம் வகுப்பு விடுபட்ட பாடங்களுக்கான பொதுத்தேர்வும் ரத்து செய்யப்பட்டு, காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண் மற்றும் வருகைப்பதிவேடு அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து, மாணவர்களின் விடைத்தாள்கள், ரேங்க் கார்டுகள், வருகை பதிவேடு ஆகியவற்றை சமர்ப்பிக்க அந்தந்த பள்ளிகளுக்கு தேர்வுத்துறை உத்தரவிட்டிருந்தது.
விடைத்தாள்கள் மாணவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால் அதனை மீண்டும் சமர்ப்பிப்பதில் குழப்பம் ஏற்பட்டது. இதற்கு விளக்கம் அளித்துள்ள தேர்வுத்துறை அதிகாரிகள், விடைத்தாள்களை ஒப்படைப்பது அவசியம் இல்லை என்றும், ரேங்க் கார்டுகள் மற்றும் மதிப்பெண் பதிவேடுகளை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
Comments