இந்தியா,சீனா இடையே சமரசம் செய்யும் திட்டம் டிரம்பிடம் இல்லை-அமெரிக்க அரசு
இந்தியா, சீனா இடையே சமரசம் செய்யும் திட்டம் அதிபர் டிரம்பிடம் இல்லை என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
கால்வன் பள்ளத்தாக்கு பகுதியில் அண்மையில் இந்தியா, சீனா துருப்புகள் இடையே நேரிட்ட கைகலப்பு மோதலாக மாறியது. இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனா தரப்பில் பலி, காயமடைந்தோர் எண்ணிக்கை 43ஆக இருக்கலாம் என செய்தி வெளியாகியுள்ளது. இதையடுத்து கால்வன் பள்ளத்தாக்கு பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து வாசிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் (White House Press Secretary Kayleigh McEnany)கேலெக் மெக்கனியிடம் (Kayleigh McEnany) கேட்கப்பட்டது. அதற்கு அவர், இந்தியா, சீன வீரர்கள் மோதிக் கொண்டது அதிபர் டிரம்புக்கு தெரியும் எனவும், இருப்பினும் அதிகாரப்பூர்வமாக சமரசம் செய்யும் திட்டம் அவரிடம் இல்லை எனவும் பதிலளித்தார்.
Comments