அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றிபெற சீன அதிபரின் உதவியை நாடிய டிரம்ப்
அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றிபெறத் தனக்கு உதவும்படி சீன அதிபர் சி ஜின்பிங்கிடம் டொனால்டு டிரம்ப் கேட்டுக் கொண்டுள்ளதாக அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக 16 மாதங்கள் டிரம்பிடம் பணியாற்றிய ஜான் போல்டன், ரூம் வேர் இட் ஹேப்பண்டு என்னும் பெயரில் ஒரு நூலை எழுதியுள்ளார். அதில், 2019ஆம் ஆண்டு ஜப்பானின் ஒசாகாவில் நடைபெற்ற வணிகப் பேச்சின்போது, அதிபர் தேர்தலில் இரண்டாம் முறையாக வெற்றிபெறத் தனக்கு உதவும்படி சீன அதிபர் சி ஜின் பிங்கிடம் டிரம்ப் கேட்டுக்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதனால்தான் சீனா உய்குர் முஸ்லிம்களை வதைமுகாமில் அடைத்து வைத்திருப்பது பற்றி அமெரிக்கா கண்டுகொள்ளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேபோல் பிரிட்டன் ஓர் அணு ஆயுத நாடு என்பது டிரம்புக்குத் தெரியாது என்றும், பின்லாந்து ரஷ்யாவின் ஒரு பகுதி என்றே அவர் நம்பியதாகவும் ஜான் போல்டன் அந்த நூலில் தெரிவித்துள்ளார்.
Comments