பிஎஸ்என்எல் பணிகளுக்கு சீன உபகரணங்களை பயன்படுத்த தடை என தகவல்
பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்-ன் சேவையை 4ஜிக்கு மேம்படுத்தும் பணியில், சீன உபகரணங்களை பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கால்வான் பள்ளத்தாக்கில் இருநாட்டு ராணுவத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, சீனாவிற்கு எதிராக மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், சீன உபகரணங்களால் பாதுகாப்பு பிரச்சனைகள் ஏதேனும் இருந்தால், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மேம்பாட்டு பணிக்கு அவற்றை பயன்படுத்த வேண்டாம் என அரசு வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
மேலும், சீன நிறுவனங்களை சார்ந்து இருப்பதை குறைத்து கொள்ள தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கும் வலியுறுத்த, மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Comments