விமானத்தில் ஏறும் முன்பே பரிசோதனை செய்ய பினராயி விஜயன் வலியுறுத்தல்
வெளிநாடுகளில் இருந்து கேரளாவுக்கு திரும்பி வருவோர் விமானத்தில் ஏறும் முன்பாக தங்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று பரிசோதனை மூலம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்.
கோவிட் 19 பாதிப்புடைய பயணி இதர பயணிகளுடன் விமானத்தில் பயணித்து மற்றவர்களின் உயிர்களுக்கு ஆபத்து விளைவிப்பதை அனுமதிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் கேரளாவின் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதற்கு வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் தான் காரணம் என்று கூறப்படுவதையடுத்து முதலமைச்சர் பினராயி விஜயன் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளார்.
விமானத்தில் ஏறும் முன்பே பரிசோதனை செய்ய பினராயி விஜயன் வலியுறுத்தல் | #pinarayivijayan | #Kerala https://t.co/ddjpqkKWdN
— Polimer News (@polimernews) June 18, 2020
Comments