ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற்றது இந்தியா
ஐநா.பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தமற்ற உறுப்பினர்களுக்கான தேர்தலில் இந்தியா போட்டியின்றி வெற்றி பெற்றது.
ஐநா.பாதுகாப்பு கவுன்சில் 5 நிரந்தர உறுப்பினர்களையும் 10 நிரந்தரமற்ற உறுப்பினர்களையும் கொண்டது. இதன் உறுப்பினர்களின் பதவிக்காலம் 2 ஆண்டுகளாகும். சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன. 10 நிரந்தமற்ற நாடுகளில் 5 நாடுகளுக்கான வாக்குப்பதிவு நடாபெற்றது.
193 ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இணைக்கப்பட்ட நாடுகள் வாக்களித்தன. இதில் ஆசிய பசிபிக் பிரிவில் போட்டியிட்ட இந்தியா போட்டியின்றி வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா ஐநா.பாதுகாப்பு கவுன்சிலில் வெற்றி பெறுவது எட்டாவது முறையாகும். தெற்காசிய மண்டலத்தில் அமைதி, பாதுகாப்பு, தீவிரவாதத்திற்கு நிதி அளிப்பதை தடுத்தல், தீவிரவாதத்துக்கு எதிராக ஒன்று திரளுதல் போன்ற முக்கிய திட்டங்களை இந்தியா ஐநா.பாதுகாப்பு கவுன்சிலின் முன் வைக்கப்பட்டிருப்பதாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
Comments