டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு கொரோனா

0 3627

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடும் காய்ச்சல் மற்றும் சுவாசப் பிரச்சனை இருந்ததால் ராஜீவ்காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு எடுக்கப்பட்ட முதல் பரிசோதனையில் கொரோனா இல்லை என தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் மூச்சுவிடுவதில் சிரமம் இருந்ததால் இரண்டாவது முறையாக கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டதில் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே ஆளும் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்எல்ஏ ஆதிஷிக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

அவருக்கு உடல் நல பாதிப்பு அதிகமில்லை என்பதால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே 2 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments