சீனாவின் 52 மொபைல் செயலிகளை தடைசெய்ய மத்திய அரசுக்கு பரிந்துரை
சீனாவுடன் தொடர்புடைய 52 மொபைல் செயலிகளை தடை செய்யுமாறு மத்திய அரசிடம் உளவு அமைப்புகள் கேட்டுக் கொண்டுள்ளன.
இந்த செயலிகள் இந்தியாவுக்கு பாதுகாப்பானவை அல்ல என்றும் அவற்றின் மூலம் இந்தியா குறித்த பல தரவுகள் கடத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் உளவு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
ஜூம் வீடியோ செயலி, டிக்டாக், யுசி பிரவுசர், ஷேர் இட், கிளீன் மாஸ்டர், xender உள்ளிட்ட தடை செய்ய வேண்டிய செயலிகளில் பட்டிலும் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது இந்த பரிந்துரை மீது ஆலோசனை நடப்பதாகவும், ஒவ்வொரு செயலியால் எந்த வகையான ஆபத்து ஏற்படும் என்பது ஒன்றன் பின் ஒன்றாக சோதிக்கப்படும் எனவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜூம் செயலி பாதுகாப்பானது அல்ல என கடந்த ஏப்ரலில் எச்சரித்த உள்துறை அமைச்சகம் அரசு துறைகளில் அது பயன்படுத்தப்படுவதில்லை எனவும் விளக்கம் அளித்தது.
இந்த நிலையில் போர் என்று வந்தால் சீன செயலிகள் வாயிலாக எதிரிநாட்டின் தகவல் தொடர்பில் குழப்பங்களை ஏற்படுத்த முடியும் எனவும் கூறப்படுகிறது.
Comments