எகிறும் கொரோனா பாதிப்பு உச்சம் தொட்ட அச்சம்
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்து 55 ஆயிரத்தைத் தாண்டி விட்டது. நாளுக்கு நாள், வைரஸ் தொற்று பாதிப்பு உயர்ந்து வரும் நிலையில் கொரோனா உயிர்ப்பலி, 12 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவின் பாதிப்பு, இந்தியாவிலும் புதிய உச்சத்தை எட்டி உள்ளது. நாடு முழுவதும் ஒரே நாளில் 10 ஆயிரத்து 974 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது.
மஹாராஷ்டிராவில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 13 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
தமிழகம், இந்த பட்டியலில் தொடர்ந்து, 2- வது இடம் வகிக்கிறது.
டெல்லியில், கொரோனா பாதிப்பு 44 ஆயிரத்தையும், குஜராத்தில் 24 ஆயிரத்தையும் தாண்டி உள்ளது.
உத்தரபிரதேசத்தில் 14 ஆயிரத்திற்கு மேற்பட்டோரும், ராஜஸ்தானில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மேற்கு வங்காளத்தில் வைரஸ் தொற்று உறுதி ஆனோர் எண்ணிக்கை 12 ஆயிரத்தை நெருங்க,
மத்திய பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு, 11 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
ஹரியானா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் கேரளா என பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு கணிசமாக உயர்ந்தது.
நாடு முழுவதும் ஒரு லட்சத்து 55 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் கொரோனா வுக்கு, சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அதே நேரம், ஆறுதல் அளிக்கும் வகையில், சுமார் ஒரு லட்சத்து 87 ஆயிரம் பேர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர். இதனிடையே, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்து 55 ஆயிரத்தை தாண்ட, கொரோனா உயிர்ப் பலி 12 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
Covid19 UPDATE!
— Dr Harsh Vardhan (@drharshvardhan) June 17, 2020
?देश का recovery rate 52.80%
?देश में COVID19 से recover हो चुके लोग 1,86,934
?कुल Active Cases 1,55,227
?24 घंटे में ठीक हुए मरीज़ 6922
जीतेगा भारत, हारेगा कोरोना pic.twitter.com/WWnUZpi5I2
Comments