சென்னையில் கொரோனாவுக்கு பலியான முதல் காவல் அதிகாரி

0 10490

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாம்பலம் காவல்நிலைய ஆய்வாளர் பாலமுரளி சிகிச்சை பலினின்றி  இறந்தார்.

47 வயதான இவர், வடபழனி காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். கடந்த 3ஆம் தேதி விருகம்பாக்கத்தில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டவருக்கு 4ஆம் தேதி நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உடனடியாக கிண்டி ஐ.ஐ.டி தனிமைப்படுத்துதல் முகாமில் சேர்ந்தார். 

இவர் ஏற்கனவே நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், 6ஆம் தேதி பாலமுரளிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பின்னர்,  9ஆம் தேதி இரவு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில்,  சிகிச்சை பலனின்றி இன்று மரணம் அடைந்தார்.

ஆய்வாளர் மரணச் செய்தி அறிந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தொலைபேசி வழியாக பாலமுரளியின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். ஆய்வாளரின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் பணி வழங்க உத்தரவிட்டுள்ளார்.. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments