ஆற்றுக்குள் மூழ்கிய 500 ஆண்டுகள் பழமையான கோயில் கண்டுபிடிப்பு
500 ஆண்டுகள் பழமையானது என்று கருதப்படும் 60 அடி உயரமான கோயில் ஒன்று ஒடிசாவில் ஓடும் மகாநதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1933 ல் ஏற்பட்ட வெள்ளத்தில் இந்த கோயில் ஆற்றில் மூழ்கியதாக கூறப்படுகிறது.
நயாகர் என்ற இடத்தில் உள்ள இந்த கோயிலும், அது அமைந்துள்ள கிராமமும், ஆற்றின் போக்கில் ஏற்பட்ட மாற்றத்தால் முழுவதுமாக நீரில் மூழ்கி விட்டன. அண்மையில் கோயிலின் மேற்பகுதி நீருக்கு மேல் தெரிந்ததை அடுத்து தேசிய கலை மற்றும் கலாச்சார அறக்கட்டளையின் தொல்லியல் துறை குழுவினர் வந்து கோயில் நீரில் மூழ்கி உள்ளதை கண்டுபிடித்தனர்.
இதே போன்று மேலும் 65 கோயில்கள் மகாநதிக்குள் மூழ்கி இருப்பதாக தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
Comments