வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் பழனியின் குடும்பத்தினருக்கு மாவட்ட ஆட்சியர் நேரில் ஆறுதல்

0 6480

இந்திய - சீன எல்லையில் இருதரப்பு வீரர்கள் இடையேயான மோதலில் வீர மரணம் அடைந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனியின் குடும்பத்தினருக்கு மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தமிழக அரசின் சார்பில் நேரில் ஆறுதல் தெரிவித்தார்.

உயிரிழந்த தமிழக வீரரின் குடும்பத்துக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 20 லட்சம் ரூபாய் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் அறிவித்துள்ளார்.

அரசின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அரசு மரியாதை செய்வார் எனறு அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து இன்று ராணுவ விமானம் மூலம் மதுரை விமான நிலையத்துக்கும் அங்கிருந்து ராணுவ வீரர் பழனியின் சொந்த கிராமமான திருவாடானையை அடுத்த கடுக்கலூருக்கும் உடல் கொண்டு வரப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments