சீனப் பொருட்களுக்கு தடை விதிக்க அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பு கோரிக்கை

0 5172

கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய துருப்புக்களை தாக்கி 20 பேர் இறப்புக்கு காரணமான சீனாவின் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என பல தரப்பிலும் இருந்து அரசுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து இறக்குமதியாகும் 450 வகையான பொருட்களை புறக்கணிக்க  நடவடிக்கை எடுக்குமாறு அகில இந்திய வர்த்தகர் கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

சீனப் பொருட்கள் அனைத்தையும் புறக்கணிக்க வேண்டும் என கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் டுவிட்டரில் வலியுறுத்தி உள்ளார். 

சீன மோதலில் உயிரிழந்த இந்திய வீரர்களுக்கு இந்திய அணி வீரர் ஷிகர் தவான், முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் ஆகியோர் டுவிட்டரில் வீரவணக்கம் செலுத்தியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments