சென்னை மாநகராட்சியின் 4 மண்டலங்களுக்கு புதிதாக கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி நியமனம்
சென்னை மாநகராட்சியின் நான்கு மண்டலங்களுக்கு புதிதாக கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ராயபுரம், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களுக்கு ஏற்கனவே நியமிக்கப்பட்டிருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பதிலாக புதிய அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
அந்த வகையில், ராயபுரம் மண்டலத்திற்கு கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக இருந்த சிவருத்ரய்யா-வுக்கு பதிலாக ஐ.ஏ.எஸ். அதிகாரி பாலசுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோன்று, ஆலந்தூர் மண்டலத்தில் அதிகாரி எம்.எஸ்.சண்முகத்திற்கு பதிலாக ஐ.ஏ.எஸ். அதிகாரி நிர்மல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தவிர கொரோனா சிறப்பு பணிகளுக்கு இரண்டு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்படுவதாகவும், இரு அதிகாரிகளும் மாநகராட்சி ஆணையரின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் 4 மண்டலங்களுக்கு புதிதாக கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி நியமனம் | #ChennaiCorporation | #CoronaPandemic https://t.co/nIusSVHI6L
— Polimer News (@polimernews) June 17, 2020
Comments