ஹோன்டுராஸ் நாட்டு அதிபருக்கு கொரோனா
மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஹோன்டுராஸ் நாட்டு அதிபர் ஜூவன் ஆர்லான்டோ ஹெர்நான்டேசுக்கு (
JUAN ORLANDO HERNANDEZ) கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரை நிகழ்த்தியபோது, இந்த தகவலை அவர் வெளியிட்டார். இதேபோல் தனது மனைவி அனா, 2 உதவியாளர்கள் ஆகியோருக்கும் மருத்துவ பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக ஜூவன் ஆர்லான்டோ கூறியுள்ளார்.
கொரோனா உறுதியாகியிருப்பதால், தனிமையில் இருந்த நிலையில் அதிபருக்கான பணியை தொடர்ந்து செய்யப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Comments