சென்னையில் அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கே நேரடியாகச் சென்று வழங்கிட ஆலோசனை
சென்னை மாநகரத்தில் வரும் வெள்ளிக்கிழமை முதல் 12 நாட்களுக்கு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை வீடுகளுக்கே நேரடியாகச் சென்று வழங்கிட ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னை மணலி மண்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் உதயகுமார் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகளை வழங்கியபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா வைரஸ் தொற்றை முற்றிலுமாக ஒழிப்பதில் தமிழக அரசு முனைப்புடன் செயலாற்றி வருகிறது என்றார்.
சென்னையில் அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கே நேரடியாகச் சென்று வழங்கிட ஆலோசனை #Chennai | #MinisterRBUdhayaKumar https://t.co/vhN9OyvGdI
— Polimer News (@polimernews) June 17, 2020
Comments