இந்திய வீரர்களின் தாக்குதலில் சீன தரப்பில் 35 வீரர்கள் பலி

0 3455

இந்திய தாக்குதலில் 35 சீன வீரர்கள் பலியானதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. லடாக்கின் கிழக்கு பகுதியிலுள்ள கால்வன் பள்ளத்தாக்கில் 15, 16ம் தேதி இரவில் நேரிட்ட மோதலில் இந்திய தரப்பில் கர்னல் உள்ளிட்ட 20 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் சீன தரப்பில் நேரிட்ட உயிரிழப்பு, காயம் குறித்த எண்ணிக்கை விவரம் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் சீனா தரப்பில் மூத்த அதிகாரி உள்பட 35 வீரர்கள் பலியானதாக அமெரிக்க உளவுத்துறை கூறியதாக அமெரிக்காவை சேர்ந்த யூ.எஸ். நியூஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

தங்களது தரப்பில் நேரிட்ட உயிரிழப்பு குறித்து தெரிவித்தால், அது அவமானம் என்று சீனா கருதுவதாகவும், இது பிற எதிரி நாடுகளையும் ஊக்கப்படுத்தும் வகையில் அமையலாம் என அஞ்சி அந்த விவரத்தை சீனா வெளியிடவில்லை எனவும் அமெரிக்க உளவுத்துறை கூறியதாக செய்தியில் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments