ஊரடங்கு தளர்வு : வேலையில்லா திண்டாட்டம் கணிசமாக குறைந்துள்ளது - CMIE
ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, ஏராளமான தொழிலாளர்கள் பணிக்குத் திரும்புவதால், வேலையில்லா திண்டாட்டம் இந்த மாதம் கணிசமாக குறைந்துள்ளது என CMIE என்ற தனியார் பொருளாதார ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வேலையில்லா திண்டாட்டம் 23.5 சதவிகிதமாக இருந்தது. இந்த மாத முதல் வார காலத்தில் அது சரசரவென குறைந்து, 17.5 சதவிகிதமாகவும், இரண்டாம் வாரத்தில் மேலும் குறைந்து 11.6 ஆகவும் உள்ளது.
ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது இருந்த வேலையில்லா திண்டாட்டத்தை வைத்து பார்க்கும் போது இது மாபெரும் மாற்றம் என்று அந்த ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது.
ஊரடங்கு வெற்றிகரமாக விலக்கப்பட்டு வருவதால் தொழிலாளர்களின் பொருளாதார பங்களிப்பு விகிதமும் 35.4 ல் இருந்து 40.4 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது.
Comments