மருத்துவ ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினரை அனுமதிக்கக் கோரிய மனுவிற்கு மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

0 1204

தமிழகத்திலுள்ள மருத்துவ கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீடுக்கு வழங்கப்பட்ட இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில் வரும் 22ம் தேதிக்குள் மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்திலுள்ள மருத்துவ கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கு 15 சதவீத இடங்களும், எம்.டி., எம்.எஸ்., எம்.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ உயர்படிப்புகளுக்கு 50 சதவீத இடங்களையும் தமிழக அரசு வழங்குகிறது.

நீட் தேர்வில் வெற்றி பெறும் எஸ்.சி/எஸ்.டி., மாற்றுத் திறனாளிகள் தவிர, ஓபிசி பிரிவினர் இந்த இடங்களுக்கான கலந்தாய்வில் பங்கேற்க முடியாது.

இதனால் ஓபிசி பிரிவினரையும் இந்த இடஒதுக்கீட்டி அனுமதிக்கக் கோரி தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகள் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனு தொடர்பாக மத்திய அரசு வரும் 22ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments