கீழடி அருகே கி.பி. 17ம் நூற்றாண்டு தங்க நாணயம் கண்டுபிடிப்பு
சிவகங்கை மாவட்டம் கீழடி அருகே அகழாய்வு பணியில் கி.பி. 17ம் நூற்றாண்டை சேர்ந்த தங்க நாணயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள அகரம் பகுதியில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் தங்க நாணயம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த நாணயம் ஒரு சென்டிமீட்டர் அளவும், 300 மில்லி கிராம் எடையும் கொண்டுள்ளது. இந்த நாணயம், கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் புழக்கத்தில் இருந்துள்ளது.நாணயத்தின் முன்பக்கத்தில் நாமம் போன்றும், நடுவில் சூரியன், அதன் கீழே சிங்க உருவமும் காணப்படுகின்றன.
பின் பக்கம் 12 புள்ளிகளும், அதன் கீழ் 2 கால் மற்றும் இரண்டு கைகளுடன் கூடிய உருவமும் காணப்படுகின்றன.இக்காசு வீரராயன் பணம் என்று பொதுவாக அழைக்கப்பட்டுள்ளது.
Comments