இந்திய வீரர்கள் எல்லையைக் கடந்ததால் சிக்கல் ஏற்பட்டதாக சீனா குற்றச்சாட்டு
எல்லையில் இந்தியப் படையினரை கட்டுப்படுத்த வேண்டும் என சீனா தெரிவித்துள்ளது.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய அந்நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சுவோ லிஜியான் (Zhao Lijian), இந்திய துருப்புக்கள் எல்லையை கடந்ததால், பிரச்சனை சிக்கலாகி விட்டதாக தெரிவித்தார்.
எல்லையில் உள்ள படையினரை கட்டுப்படுத்துவதுடன் அவர்கள் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளில் ஈடுபடாமல் பார்த்துக் கொள்ளுமாறு இந்தியாவிடம் கேட்டுக் கொண்டுள்ளதாக அவர் கூறினார்.
எல்லைப் பிரச்சனையை இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கவும், அதன் மூலம் பதற்றம் குறைந்து அமைதி நிலவ இருநாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் சுவோ லிஜியான் தெரிவித்தார். ஆனால் இருதரப்பு மோதலில் சீனாவின் தரப்பில் ஏற்பட்டுள்ள உயிரிழப்பு குறித்து அவர் எதுவும் குறிப்பிடவில்லை.
Comments