திருவிக நகர் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 3,000ஐ தாண்டியது

0 1804

சென்னை திருவிக நகர் மண்டலத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 15 மண்டலங்களிலும் கொரோனா பாதிப்பு 34,245ஆக அதிகரித்துள்ளது.

இதில் ராயபுரத்தில் அதிகபட்சமாக 5,486 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. தண்டையார்பேட்டையில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 4,370ஆகவும், தேனாம்பேட்டையில் 4,143ஆகவும், கோடம்பாக்கத்தில் 3,648ஆகவும், அண்ணாநகரில் 3,431ஆகவும், திருவிக நகரில் 3 ஆயிரத்து 41ஆகவும் உயர்ந்துள்ளது.

அடையாறில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,931ஆக அதிகரித்த நிலையில், வளசரவாக்கத்தில் 1,444ஆகவும், திருவொற்றியூரில் 1,258ஆகவும், அம்பத்தூரில் 1,190ஆகவும் உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து 18,565 பேர் குணமான நிலையில், 422 பேர் பலியாகியுள்ளனர். தொற்று பாதித்தோரில் 60 புள்ளி 09 சதவீதம் பேர் ஆண்கள் ஆவர், 39 புள்ளி 90 சதவீதம் பேர் பெண்கள் ஆவர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments