கொரோனா தொற்று காரணமாக 21ம் தேதி நடக்கவிருந்த சூரிய கிரகண கண்காட்சி ரத்து

0 6802

கொரோனா தொற்று காரணமாக ஹரியானா மாநிலத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த சூரிய கிரகண கண்காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அம்மாநில முதலமைச்சர் மனோகர்லால் கட்டார் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், கொரோனா தொற்றின் பரவல் காரணமாக குருஷேத்திரத்தில் வரும் 21ம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த சூரிய கிரகண கண்காட்சி ரத்து செய்யப்படுவதாக பதிவிட்டுள்ளார்.

முன்னதாக வரும் 21ம் தேதி ஏற்படும் முழு சூரிய கிரகணம் மத்திய ஆபிரிக்க குடியரசு, காங்கோ, எத்தியோப்பியா, பாகிஸ்தான், இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments