மத்தியப் பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் உடல் நலம் பாதிப்பு

0 1391

உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள மத்தியப் பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் உடல் நலம் மோசமாக இருந்தாலும் உயிருக்கு ஆபத்தில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூச்சுத்திணறல், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த11 ஆம் தேதி லக்னோவில் உள்ள மேதாந்தா மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 15 ஆம் தேதி முதல் அவரது நுரையீரல், சிறுநீரகம், கல்லீரலில் ஏற்பட்ட சிக்கல்களின் காரணமாக அவருக்கு செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது, அவரது உயிருக்கு ஆபத்தில்லை என அந்த மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments