பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணிப்பது, பிச்சை எடுப்பது உள்ளிட்ட குற்றங்களுக்கு சிறைத் தண்டனையை நீக்க பரிசீலனை

0 2552

ரயிலில் பயணச் சீட்டு இல்லாமல் பயணிப்பது, பிச்சை எடுப்பது உள்ளிட்ட பல்வேறு சிறு குற்றங்களுக்குச் சிறைத்தண்டனை விதிக்கும் சட்டப் பிரிவுகளை நீக்குவதற்கு அரசு திட்டமிட்டு வருகிறது.

நீதிமன்றங்களுக்கு வரும் வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் நடவடிக்கையாக ஒவ்வொரு துறைகளிலும் உடனடி அபராதம் மட்டும் விதிக்கக்கூடிய வகையிலான குற்றங்களுக்குச் சிறைத் தண்டனை வழங்கும் பிரிவுகளை நீக்குவதற்காக அவற்றை அடையாளம் காணும்படி அமைச்சரவைச் செயலகம் கேட்டுக்கொண்டுள்ளது.

ரயில்வே சட்டப்படி. பயணச் சீட்டு இல்லாமல் பயணிப்பதும், ரயிலில் பிச்சை எடுப்பதும், படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணிப்பதும் அபராதம் அல்லது சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படுவதற்குரிய குற்றங்களாகும்.

இவற்றுடன் காரணமின்றி அபாயச் சங்கிலியை இழுப்பது உட்பட 16 பிரிவுகளுக்குச் சிறைத் தண்டனை விதிப்பதைத் தவிர்த்துவிடலாம் என ரயில்வே அமைச்சகம் அடையாளம் கண்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments