பூமிக்குள் புதைந்திருந்த 200 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் கண்டுபிடிப்பு
ஆந்திர மாநிலம், நெல்லூரில் மணல் தோண்டும் பணியின்போது பூமிக்குள் புதையுண்டு கிடந்த 200 ஆண்டுகள் பழைமையான சிவன் கோயில் கண்டுபிடிக்கப்பட்டது.
நெல்லூர் மாவட்டத்தில் பென்னா நதிக்கரையோரம் மணல்குவாரி அமைக்கப்பட்டு மணல் எடுக்கும் பணி நடைபெறுகிறது. அண்மையில் அங்கு மணல் எடுக்கும்போது பூமிக்குள் ஏதோ மிகப்பெரிய கட்டிடம் தென்படுவதை தொழிலாளர்கள் கண்டனர்.
இதையடுத்து அதிகாரிகளுக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு மீண்டும் குழி தோண்டும் பணி மேற்கொள்ளப்பட்டபோது, கோயில் கோபுரம் தென்பட்டது. இதனால் பணி நிறுத்தப்பட்டு, சுற்றி பாதுகாப்பு போடப்பட்டு ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
Comments