இந்தியா-சீனா மோதலை உன்னிப்பாக கவனிக்கிறோம் - அமெரிக்கா
கால்வன் பள்ளத்தாக்கில் இந்தியா- சீனா வீரர்கள் இடையே மோதல் மூண்டதை உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
வாசிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர், எல்லை கட்டுப்பாடு பகுதியில் இந்தியா, சீனா படைகள் இடையே மோதல் நேரிட்டதை உன்னிப்பாக கவனிப்பதாக தெரிவித்தார்.
இந்தியாவும், சீனாவும் பதற்றத்தை தணிக்க விருப்பம் தெரிவித்திருப்பதாக கூறிய அவர், இருநாடுகளிடையேயான பிரச்னைக்கு அமைதி தீர்வு காணப்படுவதை அமெரிக்கா ஆதரிப்பதாகவும் குறிப்பிட்டார்.
இந்திய தரப்பில் 20 வீரர்கள் பலியாகியிருப்பதாக கூறப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய அவர், அந்த 20 வீரர்களின் குடும்பத்தினருக்கும் அமெரிக்கா இரங்கல் தெரிவிப்பதாகவும் தெரிவித்தார். கடந்த 2ம் தேதி இந்தியா, சீனா எல்லை விவகாரம் குறித்து டிரம்பும், மோடியும் ஆலோசனை நடத்தியதாகவும் அவர் கூறினார்.
Comments