பிளஸ் 2 தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு

0 5390

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை தவற விட்ட மாணவர்களுக்கு மறு வாய்ப்பு வழங்கப்படும் என தேர்வுத்துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் 24-ம் தேதி அன்று நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வை சுமார் 36ஆயிரம் மாணவர்கள்  எழுத முடியாத சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில், 24-ம் தேதியன்று நடைபெற்ற வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் பாடங்களுக்கான பொதுத்தேர்வை எழுத முடியாமல் போன மாணவர்கள், தேர்வை தவறவிட்டதற்கான காரணத்தை குறிப்பிட்டு மீண்டும் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்து அந்தந்த தலைமை ஆசிரியரிடம் கடிதம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மாணவர்களின் விருப்ப கடிதங்களை ஜூன் 24-ம் தேதிக்குள் மாவட்ட தேர்வுத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்க தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெறப்படும் கடிதங்களின் அடிப்படையில் மறு தேர்வு நடத்துவதா? அல்லது துணைத்தேர்வாக நடத்துவதா என்பது குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளதாக தேர்வுத்துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments