சென்னை மாவட்ட எல்லைகளில் சோதனைகள் தீவிரம்..!
இ-பாஸ் இல்லாமல் சென்னையில் இருந்து வெளியேற முயன்ற இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை போலிசார் எச்சரித்து திருப்பி அனுப்பினர். சென்னையில் நோய்த் தொற்று அதிகரித்து வருவதினால், மாவட்ட எல்லைகளில் சோனைச்சாவடிகள் அமைத்து வாகனங்கள் தணிக்கை செய்யப்படுகின்றன்.
வண்டலூர் பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில், இ-பாஸ் இல்லாமல் சென்னையில் இருந்து வெளியே செல்ல முயன்ற வாகனங்கள் எச்சரித்து திருப்பியனுப்பபட்டன மேலும் சில வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில், வெளிமாவட்டங்களில் இருந்து சென்னைக்குள் நுழையும் பெருங்களத்தூர் போன்ற சோதனைச்சாவடிகளில் போதிய சோதனைகள் நடைபெறாததால் வதிகளை பின்பற்றாத வாகனங்களும் எளிதாக நுழைந்தன. மாவட்டத்திற்குள் வரும் வாகனங்களை முறையாக சோதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Comments