சென்னையில் கொரோனா உயிரிழப்புகளை தடுக்க 100 HI flow ஆக்சிஜன் கருவிகள்

0 2017

சென்னையில் மூச்சுத்திணறல் காரணமாக ஏற்படும் கொரோனா உயிரிழப்புகளை தடுக்க 100 HI flow ஆக்சிஜன் கருவிகள் வாங்கப்பட்டுள்ளன.

கொரோனா பாதித்தவர்களில் நீரிழிவு, ரத்த அழுத்தம், இருதயம், நுறையீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பு போன்ற வேறு உடல் பிரச்சனைகள் உடையவர்கள் சுவாசக்கோளாறு காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழக்க நேரிடுகிறது. இவர்களுக்கு சாதாரணமாக நிமிடத்திற்கு 5 லிட்டர் முதல் 10 லிட்டர் வரை ஆக்சிஜன் வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், மேற்குறிப்பிட்ட வகையில் பாதிப்புக்குள்ளாகும் நபர்களுக்கு தடையின்றி நிமிடத்திற்கு 50 லிட்டர் முதல் 60 லிட்டர் வரை ஆக்சிஜன் செலுத்தும் வகையில் Hi flow ஆக்சிஜன் கருவிகள் வாங்கப்பட்டுள்ளன.

தலா 2 லட்சத்து 75ஆயிரம் ரூபாய் மதிப்பில் 100 கருவிகள் வாங்கப்பட்டுள்ளது. இவைகள் சென்னை அரசு மருத்துவமனைகளில் ஓரிரு நாட்களில் பொருத்தப்படும் என மருத்துவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments