36 ஏலியன் சமுதாயங்கள் இருக்க வாய்ப்பு?

0 4111

பூமியை போன்று உயிர்கள் உள்ள வேறு கிரகம் உள்ளதா என்பதை கண்டுபிடிக்கும் மனிதனின் முயற்சிக்கு இதுவரைவிடை கிடைக்காவிட்டாலும், நமது அண்டத்தில் நம்மைப் போன்ற அறிவார்ந்த உயிர்கள் என கருதப்படும் ஏலியன்கள் சுமார் 36 கிரகங்களில் இருக்கலாம் என்ற முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்துள்ளனர்.

அதே நேரம் இவர்கள் எந்த கிரகங்களில் வாழ்கிறார்கள், இவர்களுடன் நமக்கு தொடர்பு கொள்ள இயலுமா என்ற பல கேள்விகள் விடை தெரியாமல் உள்ளன. இந்த நிலையில் நாட்டிங்ஹாம் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சிலர் அண்ட பரிணாமக் கொள்கையின் அடிப்படையில் இந்த 36 ஏலியன் சமுதாயங்கள் இருப்பதாக கூறுகின்றனர்.

The Astrophysical Journal என்ற வானியல் இதழில் இவர்கள் வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரையில், விண்மீன் நட்சத்திரங்கள் உருவாகுதல், அவற்றின் கனிம-உலோக அமைப்பு ஆகியவற்றை வைத்து ஆய்வு செய்ததில், இதர பால் வீதிகளில் பூமியைப் போன்ற கோள்கள்  இருக்கலாம்  என்ற முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments