தற்போதைய சூழலில் மும்பைக்கு செல்ல எனக்கு தைரியம் இல்லை:அமைச்சர் நிதின்கட்காரி
தற்போதைய சூழலில் மும்பைக்கு செல்ல தமக்கு தைரியம் இல்லை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமை நிலவரப்படி மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்து 10 ஆயிரத்தை தாண்டி விட்ட நிலையில், மும்பையில் மட்டும் 60 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
இந்த நிலையில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய நிதின்கட்காரி, கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் மும்பைக்கு செல்ல தமக்கு தற்போது துணிச்சல் இல்லை என்றார். ஆனால் இந்த நிலை நிச்சயம் மாறும் என்று அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய சூழலில் மும்பைக்கு செல்ல எனக்கு தைரியம் இல்லை:அமைச்சர் நிதின்கட்காரி #Mumbai | #MinisterNitinGadkari | #Covid19 https://t.co/quEv7G4AiU
— Polimer News (@polimernews) June 16, 2020
Comments