தென்கொரியா-வடகொரியா அதிகாரிகள் சந்தித்து பேசும் அலுவலக கட்டிடத்தை வடகொரியா வெடிவைத்து தகர்த்து விட்டதாக தகவல்
வடகொரியா, தென்கொரியா அதிகாரிகள் சந்தித்து பேச பயன்படுத்தப்பட்ட அலுவலக கட்டிடத்தை வடகொரியா தகர்த்து விட்டதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.
தென்கொரியா, வடகொரியா தலைவர்கள் நட்புறவு பாராட்டியதால் பல ஆண்டுகளாக நிலவிய பகை மறைந்து இயல்பு நிலை திரும்பும் என்ற நம்பிக்கை நிலவியது.
இந்நிலையில் தென்கொரியாவில் இருந்து வடகொரியாவை விமர்சித்து துண்டு பிரசுரங்கள் வீசப்படுவதாகவும், இதற்கு பதிலடியாக ராணுவ நடவடிக்கையை எடுக்கப் போவதாகவும் வடகொரியா மிரட்டல் விடுத்திருந்தது.
இந்த சூழ்நிலையில், வடகொரியா எல்லைக்குட்பட்ட கேசோங்கில் (Kaesong) 2 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்ட கட்டிடத்தை வடகொரியா தகர்த்துவிட்டதாக தென்கொரியா கூறியுள்ளது.
Comments