தமிழகத்தில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படும்-அமைச்சர் பாண்டியராஜன்

0 3283

கொரோனாவுக்கு தமிழகத்தில் மருந்து கண்டுபிடிக்கப்படும் என அமைச்சர் பாண்டியராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சென்னை கொடுங்கையூர் நாராயணசாமி தோட்டம் மற்றும் முத்தமிழ் நகர் ஆகிய பகுதிகளில் கொரோனா பரிசோதனை சிறப்பு மருத்துவ முகாம்களில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் சுதா சேஷைய்யன் குழுவினர் ஈடுபட்டு இருப்பதாகவும், இந்திய மருத்துவ கவுன்சில் முதற்கட்ட

ஒப்புதல் அளித்துள்ள நிலையில் அடுத்தகட்ட சோதனைகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது எனவும் அவர் தெரிவித்தார். தண்டையார்பேட்டையில் தப்பியோடிய கொரோனா நோயாளிகளில் மூன்றில் 2 பங்கு நபர்கள் பிடிபட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments