கை வைக்க வேண்டாம்... தானே இயங்கும் சானிடைசர் கருவி... ஸ்டார்ட் அப்  நிறுவனம் அசத்தல்!

0 3914

ஹைதராபாத்தை அடிப்படையாகக்கொண்டு இயங்கும் ஸ்டார்ட் அப் தனியார் நிறுவன ஒன்று, தொடாமலே சென்சாரில் கிருமிநாசினியை விநியோகிக்கும் ஆட்டோமேட்டிக் இயந்திரம் ஒன்றை வடிவமைத்திருக்கிறது.

கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த கிருமி நாசினியைப் பயன்படுத்தும் பழக்கம் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது. அலுவலகங்கள், மருத்துவமனை, மால்கள் என்று அனைத்து இடங்களிலும் கைகளால் அழுத்தி கிருமி நாசினியைப் பயன்படுத்தும் நடைமுறையே இருந்துவருகிறது. இதன் மூலமும் கோரோனோ நோய் தோற்று பரவும் அபாயம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

image

இந்த நிலையில் தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள நிறுவனம் ஒன்று தொடாமலே, தானியங்கி முறையில், சென்சார் மூலம் கிருமி நாசினியை விநியோகிக்கும் இயந்திரம் ஒன்றை வடிவமைத்திருக்கிறார்கள். உலக சுகாதார நிறுவன மற்றும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டிருக்கும் வழிகாட்டுதல் அடிப்படையில் 2.5 மில்லி.லிட்டர் அளவு கிருமிநாசினியை ஒவ்வொரு முறையும் சிந்தும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. மக்கள் மத்தியில் பெருத்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது இந்தத் தானியங்கிக் கருவி.

இந்தக் கருவியானது, மிகக்குறைந்த அளவிலான மின்சாரத்தை மட்டுமே பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு. இதில், உயர் செயல்திறன் கொண்ட அகச்சிவப்பு சென்சார், கணினி அடிப்படையில் புரோகிராம் செய்யப்பட மைக்ரோ கண்ட்ரோல்லர் ஆகியமை மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. கிருமிநாசினி சாதனம் எளிதில் நிறுவி பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மேலும், இதற்குத் தனிப்பட்ட முறையில் எந்தவித பராமரிப்பும் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கருவியை வடிவமைத்திருக்கும் தனியார் நிறுவனத்தின் நிறுவனரான எஸ்.பி.சந்து, "இந்தத் தானியங்கி முறையில்  கிருமி நாசினி விநியோகிக்கும் கருவியானது எளிதில் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு முறையும் கட்டுப்பாட்டுடன் சரியான அளவில் விநியோகிக்கப்படும். எந்தவித கசிவும் இருக்காது. கீழே சிந்தாத வகையில் உருவாக்கியிருக்கிறோம். இந்தக் கருவியைக் கடைகள், அலுவலகங்கள், மால்கள், தொழிற்சாலைகள், மருத்துவமனை என்று அனைத்து பகுதிகளில் பயன்படுத்தலாம்" என்று கூறியிருக்கிறார்.

கருவியை வடிவமைத்த முதல் மாதத்திலேயே ஆயிரம் கருவிகளை விற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தொடாமலே பயன்படுத்தும் கிருமிநாசினி கருவி மூலம் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments