பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்

0 1406

பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெறக்கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா கடிதம் எழுதியுள்ளார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக பெட்ரோல், டீசல் விலையை மாற்றியமைக்கும் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைத்த எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் அந்நடவடிக்கையில் கடந்த சில நாள்களாக ஈடுபட்டுள்ளன. இதனால் பெட்ரோல், டீசல் விலை சென்னையில் 80 ரூபாயை தாண்டியுள்ளது.

இந்த நிலையில் மோடிக்கு சோனியா காந்தி எழுதிய கடிதத்தில், நாட்டு மக்கள் சுயசார்பு கொண்டோராக திகழ வேண்டும் என விரும்பும்பட்சத்தில், அவர்களின் முன்னேற்ற திறன் மீது நிதி ரீதியிலான தடைகளை போட வேண்டாம் என கூறியுள்ளார்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த வார நிலவரத்துடன் ஒப்பிடுகையில் 9 சதவீதம் சரிந்துள்ள நிலையில், அதன் பலன்கள் பொதுமக்களை சென்றடைய அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments