ஆர்.எஸ். பாரதி ஜாமீனை ரத்து செய்ய ஆர்வம் காட்டுவது ஏன்? காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய அதிக ஆர்வம் காட்டுவது ஏன் என காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
பட்டியல் இனத்தவர்கள் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்ததாகக் கூறி, பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் கடந்த மாதம் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டார்.
இதை ரத்து செய்யக்கோரி மத்திய குற்றப் பிரிவு போலீசார் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநில அரசு கவனிக்க வேண்டிய ஏராளமான விஷயங்கள் உள்ள நிலையில், ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய அதிக அக்கறை காட்டுவது ஏன் எனக் காவல்துறைக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார், பின்னர் மனுவிற்கு பதில் அளிக்க ஆர்.எஸ்.பாரதிக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வரும் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Comments