முழு ஊரடங்கின் போது விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்-அமைச்சர்

0 1798

சென்னையில் மீண்டும் அமல்படுத்தப்படும் முழு ஊரடங்கின் போது விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னை திருவொற்றியூர் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பணிபுரியும் செவிலியர்களுக்கு, தெர்மல் ஸ்கேனர், பிராணவாயுவை அறிய உதவும் pulse oximeter கருவி, கபசுரக் குடிநீர் சூரணம், முகக்கவசம் உள்ளிட்டவற்றை வழங்கிய அமைச்சர் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசுகையில் சென்னையில் 140 நகர ஆரம்ப சுகாதார நிலையங்கள், 19க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் என 300க்கும் மேற்பட்ட காய்ச்சல் பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருவதாக கூறினார். மேலும் பொதுமக்கள் 100 சதவீதம் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments