100 வென்டிலேட்டர்களை இந்தியாவிடம் அளித்தது அமெரிக்கா

0 1366

இந்தியாவுக்கு நன்கொடையாக முதல்கட்டமாக 100 வென்டிலேட்டர்களை அமெரிக்கா அளித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டோரை படுக்கையில் அனுமதித்து செயற்கையாக சுவாசம் அளிக்க  வென்டிலேட்டர்கள் ((செயற்கை சுவாச கருவி)) மிகவும் அவசியமாகும். இத்தகைய சிகிச்சைக்கு நட்பு நாடான இந்தியாவுக்கு 200 வென்டிலேட்டர்கள் நன்கொடையாக அளிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார்.

இதில் முதல்கட்டமாக 100 வென்டிலேட்டர்களை இந்தியாவுக்கு அமெரிக்கா அனுப்பி வைத்தது. அந்த வென்டிலேட்டர்கள் இந்தியாவுக்கு வந்தடைந்தன. இதையடுத்து அவற்றை இந்தியாவிடம் அமெரிக்க அரசு ஒப்படைத்துள்ளது.

டெல்லியிலுள்ள இந்திய செஞ்சிலுவை தலைமையகத்தில் ((headquarters of the Indian Red Cross))  நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென் ஜஸ்டர், அதை இந்திய அரசிடம் ஒப்படைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments