தேனாம்பேட்டையில் 4 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு

0 978

சென்னை தேனாம்பேட்டை மண்டலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

சென்னையின் 15 மண்டலங்களிலும் கொரோனா பாதிப்பு 33 ஆயிரத்து 244ஆக உயர்ந்துள்ளது. இதில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 5,364ஆக கொரோனா  பாதிப்பு அதிகரித்துள்ளது. இதற்கடுத்து, தண்டையார்பேட்டையில் 4,226ஆகவும், தேனாம்பேட்டையில் 4,031ஆகவும், கோடம்பாக்கத்தில் 3,539ஆகவும், அண்ணாநகரில் 3,330ஆகவும் உயர்ந்துள்ளது.

திருவிக நகரில் 2,992ஆகவும், அடையாறில் 1885ஆகவும், வளசரவாக்கத்தில் 1,413ஆகவும், திருவொற்றியூரில் 1,224ஆகவும், அம்பத்தூரில் 1,148ஆகவும் அதிகரித்துள்ளது.

கொரோனாவால் இதுவரை 382 பேர் பலியான நிலையில், 17 ஆயிரத்து 275 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். இதுதவிர்த்து மருத்துவமனைகளில்  14 ஆயிரத்து 778 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments