அமெரிக்காவில் 155 இந்திய நிறுவனங்கள் மூலம் 1.25 லட்சம் வேலை வாய்ப்புகள்

0 1515

அமெரிக்காவில் 155 இந்திய நிறுவனங்கள் ஒரு லட்சத்து 25 ஆயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்கியிருப்பதாக இந்திய தொழில்கள் கூட்டமைப்பான சி.ஐ.ஐ. தெரிவித்துள்ளது.

அமெரிக்க மண்ணில் இந்திய வேர்கள் என்ற பெயரிலான அதன் அறிக்கையில் இந்திய நிறுவனங்கள் அமெரிக்காவில் 2 ஆயிரத்து 200 கோடி அமெரிக்க டாலர்கள் அளவுக்கு முதலீடு செய்துள்ளதாகவும், அதன் மூலம் வாஷிங்டன், போர்ட்டோரிகோ, டெக்சாஸ், கலிஃபோர்னியா, நியூஜெர்சி, ஃப்ளோரிடா உள்ளிட்ட அமெரிக்காவின் 50 மாநிலங்களில் 1 லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகளை ஊருவாக்கியுள்ளதாகவும் அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் ஏராளமான உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments