வாட்ஸ் ஆப் செயலி மூலம் பண பரிவர்த்தனை செய்யும் முறை அறிமுகம்
பிரேசிலில் வாட்ஸ் ஆப் மூலம் பண பரிவர்த்தனை செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பொழுது போக்கு மற்றும் தொலைத் தொடர்புக்காக மட்டும் பயன்படுத்தப்பட்டு வரும் வாட்ஸ் ஆப் செயலியில், புது அம்சமாக உள்ளூர் கடைகளின் பட்டியலை பார்க்க மற்றும் பொருட்களை வாங்கியப்பின் கிரெடிட், டெபிட் உள்ளிட்ட கார்டுகள் மூலம் பணத்தை செலுத்தும் வசதி இணைக்கப்பட்டுள்ளது.
முறைகேடான பரிவர்த்தனைகளைத் தவிர்க்கும் வகையில் கட்டணம் செலுத்தும் செயல்முறையை முடிக்க ஆறு இலக்க கடவு எண் அல்லது கைரேகை பாதுகாப்பை கொண்டுள்ளது. ஆன்லைன் பண பரிவர்த்தைனை ஊக்குவிக்கும் வகையில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Comments